திருத்தணி: ஆங்கிலப் புத்தாண்டு விழாவையொட்டி, சுந்தர விநாயகர் கோவிலில், பழங்களால், அலங்கரிக்கப்பட்டுள்ளது.
திருத்தணி, ம.பொ.சி. சாலையில் உள்ள சுந்தர விநாயகர் கோவிலில், ஆங்கில புத்தாண்டை யொட்டி, இரவு முழுவதும் கோவில் நடை திறந்திருந்தது. மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
ஆங்கில புத்தாண்டையொட்டி, கோவில் உட்புறம் முழுவதும் அனைத்து வகையான பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஆண்டுதோறும், டிச., 31 மற்றும் ஜன., 1ம் தேதி ஆகிய நாட்களில் சுந்தர விநாயகர் கோவிலில் இது போன்று பழங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.