பதிவு செய்த நாள்
01
ஜன
2019
12:01
வீரபாண்டி: ஞானந்தகிரி சுவாமிகள் ஆஸ்ரமத்தில் நடந்த, ஆராதனை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஞானந்தகிரி சுவாமிகளால் முதல் முதலாக, 1942ல் சேலம் ஆட்டையாம்பட்டியில் ஆஸ்ரமம் துவக்கப்பட்டது.
இதன்பின், பல்வேறு ஊர்களில் தங்கி மடங்களை துவக்கி கடந்த, 1974ல் தபோவனத்தில் சித்தியடைந்தார். உலகம் முழுவதும் உள்ள அவரது பக்தர்கள், முதல் ஆஸ்ரமமான ஆட்டையாம்பட்டிக்கு வந்து ஆராதனை விழா நடத்தி வழிபட்டு செல்கின்றனர்.
இதில், சென்னையை சேர்ந்த பக்தர்கள் ஆண்டுதோறும் டிச., 31ல் இங்கு வந்து, மடத்தில் உள்ள அவர் பயன்படுத்திய இருக்கை, பொருட்களை வைத்து சிறப்பு பூஜை செய்கின்றனர். நேற்று (டிசம்., 31ல்) காலை அவரது படத்தை, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வைத்து, பஜனை பாடல்களை பாடியபடி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றனர். மதியம் அவரது சிலைக்கு அபிஷேகம் செய்து ஆராதனை விழா நடத்தினர்.