பதிவு செய்த நாள்
01
ஜன
2019
12:01
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த, சிகரலப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகே, விநாயகர் கோவில் மண்டல பூஜை, 48வது நாள் நிறைவு விழா, நேற்று (டிசம்., 31ல்) நடந்தது.
இதையொட்டி, காலை விநாயகருக்கு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு பூஜை நடந்தது. இதில், சிகரலப்பள்ளி அடுத்த, தம்மகவுண்டனூர் பொதுமக்கள், மேள, தாளம் முழங்க, கரகாட்டம், ஒயிலாட்டத்துடன், மா விளக்கை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். விநாயகர் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.