பதிவு செய்த நாள்
01
ஜன
2019
01:01
ஓசூர்: ஓசூர் அரசனட்டியில், பெண்கள் பால்குடம் எடுத்து, ஊர்வலமாக சென்றனர். ஓசூர் அரசனட்டி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், 50க்கும் மேற்பட்ட பெண்கள், குருசாமிகள் மங்கம்மா, ருக்மணி ஆகியோர் தலைமையில், பால்குடம் எடுத்து, அரசனட்டி, பசுமை நகர், பாரதியார் நகர் வழியாக, அரசனட்டி மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு, அம்மனுக்கு பால் அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. மேல்மருவத்தூர் கோவிலுக்கு, மாலை அணிந்த பக்தர்கள், இருமுடி கட்டி, கோவிலுக்கு புறப்பட்டனர்.