பதிவு செய்த நாள்
01
ஜன
2019
01:01
சென்னை: ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு சென்னை மற்றும் சுற்றுப்புற கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சென்னை, மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சோமாஸ்கந்தர், அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில், காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், சென்னை தி நகரில் உள்ள திருமலா திருப்பதி தேவஸ்தானத்தில் ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சைதாப்பேட்டை சொர்னாம்பிகை உடனுறை காரணீஸ்வர்ர் கோயிலில் சோமாஸ் கந்தர், அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சென்னை மேற்கு சைதாப்பேட்டை கடும்பாடி சின்னம்மன் கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில் முன்மண்டபத்தில் நிறைமணி காட்சி விழாவில் காய்கறிகள், பழங்கள், மளிகைபொருட்கள், நோட்டு புத்தகங்கள் தோரணமாக அலங்காரம் செய்யப்பட்டிருத்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை தரிசனம் செய்தனர்.