பதிவு செய்த நாள்
02
ஜன
2019
10:01
சபரிமலை: சபரிமலை சன்னிதானத்தில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் 40 வயது உடைய, பிந்து மற்றும் கனகதுர்கா என்ற 2 பெண்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் கோயில் நடை அடைக்கப்பட்டது. பரிகார பூஜைக்கு பின் கோயில் நடை திறக்கப்பட்டது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவை தொடர்ந்து, சபரிமலைக்கு செல்ல,அனைத்து வயது பெண்களும் முயன்றனர். ஆனால், பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால், அங்கு பதற்றம் நிலவுவதால், அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் சபரிமலை செல்ல முயன்று திருபப்பி அனுப்பப்பட்ட இரண்டு பெண்கள், இன்று(ஜன.,2) அதிகாலை 3.45 மணியளவில் 18 ம் படியேறி சாமி தரிசனம் செய்தனர். அவர்களின் விவரம் பந்து மற்றும் கனதுர்கா எனவும், இரண்டு பேருக்கும் வயது 40 ஆவதும் தெரியவந்துள்ளது. இரண்டு பேரும் எந்தவித முன்னறிவிப்பின்றி, இரண்டு பேரும் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பினர். இதனால் மேல்சாந்தியுடன் தந்திரி ஆலோசனை நடத்திய பிறகு, சபரிமலை கோயில் நடை மூடப்பட்டது. பரிகார பூஜை செய்யப்பட்டு, மீண்டும் நடை திறக்கப்பட்டது. இந்நிலையில் சபரிமலை சன்னிதானம் செல்ல விரும்பும் பெண்களுக்கு பாதுகாப்பு தர போலீசுக்கு கேரள முதல்வர் உத்தவிட்டுள்ளார்.