பதிவு செய்த நாள்
02
ஜன
2019
01:01
ஓசூர்: ஓசூர், ராஜகணபதி நகரில் உள்ள வரசித்தி ஆஞ்சநேயர் கோவிலில், விவசாயம் செழிக்க நடந்த கடலைக்காய் திருவிழாவில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஓசூர், ராஜகணபதி நகரில் பிரசித்தி பெற்ற வரசித்தி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு தினத்தில், உலக மக்கள் நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும் கடலைக்காய் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. 61ம் ஆண்டு கடலைக்காய் திருவிழா நேற்று காலை, 5:30 மணிக்கு கணபதி ?ஹாமத்துடன் துவங்கியது. 7:30 முதல், 8:00 மணி வரை சுவாமிக்கு அபி?ஷகம், புஷ்ப அலங்காரம், 9:00 மணிக்கு மங்களாரத்தி மற்றும் கடலைக்காய்க்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஒன்று சேர்ந்து, கடலைக்காய்களை (நிலக்கடலை) கோவில் கோபுரம், சுவாமி மீது தூக்கி வீசி ஆஞ்சநேயரை வழிபட்டனர். கோபுரத்தின் மீது வீசப்பட்ட கடலைக்காயில், கீழே விழுந்தவற்றை மட்டும் பக்தர்கள் பிரசாதமாக வீடுகளுக்கு எடுத்து சென்றனர். ஏற்பாடுகளை, முன்னாள் நகராட்சி தலைவர் மாதேஸ்வரன், சொக்கலிங்கம், கிருஷ்ணமூர்த்தி, பா.ஜ., மாவட்ட செயலாளர் ராஜி ஆகியோர் செய்திருந்தனர்.