பழமையான கோவில்களை புதுப்பித்து கும்பாபிஷகம்: தமிழக அரசுக்கு வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜன 2019 02:01
மடத்துக்குளம்:கொமரலிங்கத்தில் அமைந்துள்ள கரிவரதராஜ பெருமாள், கடத்தூரில் அமைந்துள்ள கொங்கனீசுவரர் கோவில்களை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மடத்துக்குளம் ஒன்றிய அளவிலான, விஸ்வ ஹிந்து பரிஷத் செயற்குழு கூட்டம் மாவட்ட பொறுப்பாளர்கள் பங்களிப்புடன் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. மடத்துக்குளம் நால்ரோடு அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு பெரியசாமி தலைமை வகித்தார்.இதில், கொமரலிங்கத்தில் அமைந்துள்ள கரிவரதராஜ பெருமாள், கடத்துாரில் அமைந்துள்ள கொங்கனீசுவரர் கோவில்களை புதுப்பித்து கும்பாபிேஷகம் நடத்த வேண்டும்,
மடத்துக்குளம் அமராவதி ஆற்றுக்குச்செல்ல அகலமான பாதை அமைப்பதோடு, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் விதமாக படித்துறை அமைக்க வேண்டும், பழநி கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தங்கும் இடங்கள் அமைத்து கொடுக்க வேண்டும்.
தைப்பூச விழாவிற்கு செல்லும் பக்தர்களுக்கு இந்த அமைப்பு சார்பாக சேவைகள் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாவட்டத்தலைவர் சுந்தரசாமி, செயலாளர் சங்கர் கோபால் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.