பதிவு செய்த நாள்
04
ஜன
2019
02:01
விருத்தாசலம்:விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.பிரதோஷத்தையொட்டி, நேற்று (ஜன., 3ல்) காலை ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 4:30 மணிக்கு மேல், 100 கால் மண்டபத்தில் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அருகம்புல் மாலை சாற்றி தீபாராதனை நடந்தது.
மங்கலம்பேட்டைமாத்ருபுரீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள நந்தி பகவானுக்கு நேற்று (ஜன., 3ல்) காலை 7:00 மணிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 4:30 மணியளவில் அபிஷேகம், 5:00 மணியளவில் தீபாராதனையும்; 6:00 மணிக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.
நடுவீரப்பட்டுநடுவீரப்பட்டு கைலாசநாதர், சி.என்.பாளையம் சொக்கநாதர் மற்றும் மலையாண்டவர் ஆகிய கோவில்களில் நேற்று (ஜன., 3ல்) மாலை 5:00 மணிக்கு விநாயகர், நந்தி, பிரதோஷ நாயகர், ஈஸ்வரர், அம்மன், வள்ளி தேவசேனா சுப்ரமணியர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும்; இரவு 7:00 மணிக்கு மகா தீபாராதனையும் நடந்தது.