பதிவு செய்த நாள்
04
ஜன
2019
02:01
குளித்தலை: குளித்தலை பகுதி சிவன் கோவில்களில் நடந்த பிரதோஷ வழிபாட்டில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பிரதோஷம் முன்னிட்டு, குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவிலில், நந்தீஸ்வரருக்கு, நேற்று (ஜன., 3ல்) மாலை, மஞ்சள், சந்தனம், பால், தேன் உட்பட பலவித திறவியங்களால், சிறப்பு அபிஷேகம் செய்து, சுவாமிக்கு மஹா தீபாராதனை நடந்தது. இதேபோல், சிவாயம் சிவபுரீஸ்வரர், அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர், முத்து பாலசமுத்திரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர், மேட்டுமருதூர் ஆராவமுதீஸ்வரர் கோவில் முதலான சிவன்கோவில்களில் பிரதோஷ வழிபாடு விமரிசையாக நடந்தது. இதில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.