பதிவு செய்த நாள்
05
ஜன
2019
02:01
பந்தலூர்:சபரிமலையை பாதுகாக்க வலியுறுத்தி, பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சபரிமலையில் பெண்களை அனுமதித்தது தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு தீர்வு காணவும், மத்திய அரசு இதில் தலையிட்டு சுமூகமான தீர்வு ஏற்படுத்தவும் வலியுறுத்தி, நேற்று (ஜன., 4ல்) பந்தலூர், தேவாலா பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடத்தப் பட்டது.தேவாலா பகுதியில் காலை முதல் மதியம் வரை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பந்தலூரில் ஒரு சில கடைகள் காலை முதல் மதியம் வரை திறந்து செயல்பட்டது. தொடர்ந்து, இந்து அமைப்புகள் கேட்டு கொண்டதையடுத்து, பகல், 2:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. அதனையடுத்து பந்தலூரில் இந்து அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு, பா.ஜ., கூடலூர் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் தீபக்ராம் தலைமை வகித்தார். ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி சுரேஷ், ஐயப்பா சேவா சங்க நிர்வாகிகள், வி.எச்.பி. ஒன்றிய தலைவர் செல்வகுமார், அனுமன்சேனா நிர்வாகி தங்கம் உள்ளிட்ட இந்து அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.