திண்டுக்கல்-- குமுளி ரோட்டில் சபரிமலை வாகனங்கள் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜன 2019 02:01
சின்னாளபட்டி:சபரிமலை சீசன் வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், திண்டுக்கல் - குமுளி ரோட்டில் உள்ள குழிகள் விபத்துகளை ஏற்படுத்தி வருகின்றன.அதிக போக்குவரத்து, முக்கிய வழித்தடம் போன்ற காரணங்களால், இத்தடம் தேசிய நெடுஞ்சாலை யாக மாற்றப்பட்டது. சபரிமலை சீசன் நேரங்களில், வாகன போக்குவரத்து அதிகரிப்பது வழக்கம். இருப்பினும், பல ஆண்டுகளாக மேம்பாட்டு நடவடிக்கைகளில் அலட்சியமாக உள்ளனர்.
குட்டியபட்டி, என்.பஞ்சம்பட்டி, சுதனாகியபுரம், வீரசிக்கம்பட்டி, லட்சுமிபுரம் பகுதிகளில், ரோடு குறுகிய திருப்பங்களுடன் உள்ளது. ரோட்டோரங்களில் சேதம், குறுகிய வளைவுகள் போன்ற பிரச்னைகளால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. இரு சக்கர வாகனங்களில் செல்வோர், பாதிப்பிற்குள்ளாகின்றனர். சில வாரங்களாக சபரிமலை பக்தர்களின் போக்கு வரத்து கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. பல இடங்களில் கிராம ரோடுகளைவிட மோசமான நிலையில் சேதமடைந்துள்ளது. நெடுஞ்சாலையில் போலீசார் அமைத்துள்ள வேகத்தடுப்புகளும் விபத்துகளை ஏற்படுத்துகின்றன. ரோட்டை சரிசெய்ய தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.