பதிவு செய்த நாள்
05
ஜன
2019
02:01
காஞ்சிபுரம்: குமரகோட்டம் கோவில் உண்டியலில், 15.70 லட்சம் ரூபாய், பக்தர்களின் காணிக்கையாக கிடைத்துள்ளது.காஞ்சிபுரம், குமரகோட்டம் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள், உண்டியலில் செலுத்தும் காணிக்கை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எண்ணப்படும்.
கடைசியாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எண்ணப்பட்டது. அதன்பின், நேற்று (ஜன., 4ல்) உண்டியல் திறக்கப்பட்டது.இந்து சமய அறநிலையத் துறை, திருவள்ளூர் உதவி ஆணையர், ஜான்சிராணி தலைமையில், பக்தர்கள், உண்டியல் காணிக்கை எண்ணினர்.இதில், 15.70 லட்சம் ரூபாயும், 28 கிராம் தங்கமும், 570 கிராம் வெள்ளி இருந்தன.