பதிவு செய்த நாள்
06
ஜன
2019
02:01
பொள்ளாச்சி:பொள்ளாச்சி, கிணத்துக்கடவு மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில், அனுமன் ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது.பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், அனுமன் ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவையொட்டி காலை, 10:30 மணிக்கு, ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. ஆஞ்சநேயருக்கு, 508 வடை மாலை சாற்றப்பட்டது. அதன் பின், ஆஞ்சநேயர் வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தொடர்ந்து, கோவில் வளாகத்தில் புறப்பாடு நிகழ்ச்சியும்; அனுமன் சகஸ்ரநாம அர்ச்சனையும் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்கள் மற்றும் ஆச்சிப்பட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடைபெற்றது.கிணத்துக்கடவுகிணத்துக்கடவு மெட்டுவாவி ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தியையொட்டி, சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தது. ஆஞ்சநேயருக்கு வடைமாலை, வெற்றிலை மாலை சாற்றப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.கோவில்பாளையம் வாய்க்கால் மேடு பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.நெகமம்அனுப்பர்பாளையம், மலைதாண்டிய பெருமாள் கோவிலில், நேற்று காலை, 7.45 மணிக்கு, அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது. தொடர்ந்து, சுயம்பு வீர ஆஞ்சநேயருக்கு, 16 வகையான அபிேஷகம், சிறப்பு ஆராதனையும் நடந்தது. தொடர்ந்து, பெருமாளின் உலகளந்த திருவடி பாதங்களுக்கு அபிேஷக பூஜை செய்யப்பட்டது. காலை, 8.30 மணிக்கு, பஜனை பாடல்கள் பாடப்பட்டன.ஆனைமலைநா.மூ.சுங்கம் அருகே பிரசித்த பெற்ற பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, சனிக்கிழமை தோறும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆஞ்சநேயரை வழிபடுகின்றனர். நேற்று, சனிக்கிழமை மற்றும் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பக்தர்கள் கோவிலுக்கு அதிகளவில் வந்தனர்.ஆஞ்நேயருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள், ஆஞ்சநேயரை வழிபட்டனர்.பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில், நுழைவு வாயிலில் இருந்து கோவில் வரை, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.