பதிவு செய்த நாள்
07
ஜன
2019
12:01
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவிலில், பன்னிரு திருமுறை முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. காஞ்சிபுரம், திருக்கயிலாய பரம்பரை திருவாடுதுறை ஆதீனம் சைவத்திரு முறை நேர்முகப்பயிற்சி மையம் சார்பில், தமிழகத்தில் உள்ள பல்வேறு சிவாலயங்களில், பன்னிரு திருமுறைகள் முற்றோதல் நடத்தி வருகின்றனர். அதன்படி, 430வது நிகழ்ச்சியாக, காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவில், கொடிமரம் அருகில், பன்னிரு திருமுறை முற்றோதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், மன்ற அமைப்பாளர் வி.பழனி தலைமையில், திருவாசகம் மற்றும் திருக்கோவையார் பாடல்களை சிவனடியார்கள் மற்றும் சிவபக்தர்கள் முற்றோதல் செய்தனர்.