பழநி:பழநி முருகன் மலைக்கோயிலில் திருச்சி மாவட்டம் துறையூர் அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பில், சரவணஜோதி திருவிளக்கு பூஜை நடந்தது.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் உலகநலன் வேண்டி, சித்தர்கள் போற்றி தொகுப்பு பூஜை செய்ய வலியுறுத்தி திருவிளக்குபூஜை நடக்கிறது. அதன்படி பழநி மலைக்கோயில் வெளிப்பிரகார மண்டபத்தில் திருவிளக்குபூஜை நடந்தது. இலவசமாக பூஜைப்பொருட்கள், புத்தகம் வழங்கப்பட்டது, பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.