ராமநாதபுரம்: ராமநாதபுரம் குண்டுக்கரை முருகன் கோயிலில் 1,008 சங்காபிஷேகம் நடந்தது. ராமநாதபுரம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான குண்டுக்கரை முருகன் கோயிலில் உலக நன்மை வேண்டி யாக வேள்வி பூஜைகள் நடத்தப்பட்டது. பின் சங்கல்ப பூஜையை திவான் பழனிவேல் பாண்டியன் துவக்கி வைத்தார்.1,008 சங்காபிஷேகம் நடந்தது. பின் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரம், தீபாரதனை நடந்தது. இதில் ஏராளமாக பக்தர்கள் பங்கேற்றனர். பஷே்கார் கண்ணன் மற்றும் கோயில் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.