பதிவு செய்த நாள்
08
ஜன
2019
11:01
மதுரை: சபரிமலையில் மண்டல பூஜை காலத்தில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் மூன்று லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
செய்தி தொடர்பாளர் மணி கூறியதாவது: சபரிமலை மண்டல பூஜை காலத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்ட 36 ஆயிரத்து 406 பேருக்கு மருத்துவ உதவியும், உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டோருக்கு 521 முறை ஸ்டெரச்சர் சர்வீஸ், 15 ஆக்ஸிஜன் பார்லர் மூலம் மூச்சு திணறல் ஏற்பட்ட 1615 பேருக்கு ஆக்ஸிஜனும், 26 ஆயிரத்து 621 பேருக்கு முதலுதவி சிகிச்சை, சன்னிதான மருத்துவமனை மூலம் 7,665 பேருக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் இலவச மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.இச்சேவையில் 408 கல்லுாரி மாணவர்கள், 618 ஐயப்ப சேவா சங்கத்தினர் ஈடுபட்டனர். மதுரை எல்லீஸ்நகர் முகாமில் 60 ஆயிரம் பேருக்கும், சபரிமலை பகுதியில் மண்டல பூஜை காலத்தில் மூன்று லட்சத்து 50 ஆயிரம் பேருக்கும் அன்னதானம், நிலக்கல் முகாமில் இலவச சுக்கு தண்ணீர் வழங்கப்பட்டது. 200 வாகனங்களுக்கு பழுது நீக்கித்தரப்பட்டது. மகர விளக்கு பூஜை காலத்தில் அன்னதானம், மருத்துவ உதவிகள் செய்ய மாநில நிர்வாகிகள் லிங்கநாதன், ஐயப்பன், கிருஷ்ணமூர்த்தி, அலுவலர்கள், தொண்டர்படை தளபதிகள் எற்பாடுகளை செய்து வருகின்றனர், என்றார்.