திண்டுக்கல்:திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. காலை 9 மணிக்கு விஸ்வகர்ம சபையினர் கொண்டு வந்த திருமாங்கல்யம், மஞ்சள் புடவை அம்மனுக்கு சாத்தப்பட்டது. பின், பாலக்கொம்பு ஊன்றப்பட்டது. பிற்பகல் 12 மணிக்கு கொடியேற்றம் நடந்தது.தினமும் பாலக்கொம்புக்கு, பெண்கள் நீர் ஊற்றியும், பால்குடம், தீச்சட்டி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துவர். பல சமூகத்தினரின் மண்டகப்படிகள் நடக்கும். மார்ச் 1 ல், மின் ஒளி ரதத்தில் அம்மன் உலா வருவார். மார்ச் 3 இரவு 10 மணிக்கு, அம்மன் தசாவதாரக் காட்சி அளிப்பார். மறுநாள் மஞ்சள் நீராட்டுக்கு பின், மாலையில் கொடி இறக்கப்படும்.