ஒட்டன்சத்திரத்தில்ல் பழநி பாதயாத்திரை பக்தர்கள் முகம் சுளிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜன 2019 01:01
ஒட்டன்சத்திரம்:பழநி பாதயாத்திரை பக்தர்கள், ஒட்டன்சத்திரத்தில் குழந்தைவேலப்பரை வழிபட்டு செல்வது வழக்கம். இங்கு குழந்தை வடிவில் உள்ள முருகனுக்கு மிட்டாய் வைத்து வழிபடுவர். இங்கு பக்தர்கள் இளைப்பாறும் நேரத்தில் சமையல் செய்து உணவருந்தி செல்கின்றனர். இந்த இடங்களில் இருந்து கழிவுநீர் வெளியேற சாக்கடை வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இதில் குப்பை, மண் சேர்ந்ததால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கோயில் வளாகத்தில் கழிவு நீர் தேங்கி சுகாதார கேடை ஏற்படுத்துகிறது. கால்வாயில் அடைப்பை சரி செய்ய வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.