கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் செல்ல நுழைவு பாலம் வேண்டும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜன 2019 01:01
கொடுமுடி: கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலுக்கு, வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். காவிரியாற்றின் மேற்கரையில் கோவில் உள்ளதால், பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட், ரயில்வே நுழைவு பாலம் உள்ளிட்ட பகுதி வழியே சென்று வர வேண்டி உள்ளது. வழிகாட்டி போர்டுகள் இல்லாததால், புதிதாக வரும் பக்தர்கள் அவதிக்கு ஆளாகின்றனர். கோவிலுக்கு செல்லும் வழிகளில், ஏதேனும் ஒரு பகுதியில், நுழைவு பாலம் அமைக்கலாம். மாவட்ட நிர்வாகமும், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளும், உரிய நடவடிக்கை எடுக்க, இந்து முன்னணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.