பதிவு செய்த நாள்
09
ஜன
2019
01:01
வடவள்ளி: மருதமலையில், வரும்,15 ல் தைப்பூச திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது . தைமாதம், பூச நட்சத்திரத்தில், தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது. மருதமலையில், வரும் ஜன., 15ம் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூச விழா துவங்குகிறது.பத்து நாள் திருவிழாவில் யாகசாலை பூஜையும், சிறப்பு அபிஷே க தீபாராதனையும், சுவாமி திருவீதி உலாவும் நடக்கிறது.தைப்பூச தேர்திருவிழாவின், 7ம் நாளில், சுவாமிக்கு திருக்கல்யாண வைபவமும், பகல், 12:00 மணிக்கு வெள்ளையானை வாகனத்தில் வீதிஉலாவும், பகல், 1:00 மணிக்கு சுவாமி திருத்தேரில் எழுந்தருளல்,தேர் வடம் பிடித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.