பதிவு செய்த நாள்
09
ஜன
2019
01:01
ஈரோடு: மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா முன்னிட்டு, சூரம்பட்டி வலசு பகுதியில் கனரக வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. ஈரோடு, சூரம்பட்டி வலசு சுயம்பு மஹா மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த, 25ல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று பொங்கல் வைத்தல், மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், சிரமமின்றி பாதுகாப்பாக வந்து செல்ல வேண்டும் என்பதற்காக, கோவில் வளாகம் உள்ள பகுதிகளில் கனரக வாகனங்கள் வருவதற்கு தடை செய்யப்பட்டு, மின் விளக்கு அலங்கார கோபுரத்தில், தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவில் பணியாளர்கள் கூறியதாவது: கோவிலுக்கு வரும் வழியான சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் இருந்து, பழைய வலசு ரோட்டில் ஏற்கனவே, கனரக வாகனங்கள் செல்ல தடையுள்ளது. மற்றொரு வழியான, சூரம்பட்டி வலசு பஸ் ஸ்டாண்ட் வரை பஸ்கள் மட்டும் வந்து, பயணிகளை இறக்கி விட்டு வந்த வழியே திரும்பி செல்ல வேண்டும். பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கோவில் வளாகம் உள்ள பகுதி யில் கனரக வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். திருவிழா முடியும் வரை, காசிபாளையம் பகுதியில் இருந்து வரும் கனரக வாகனங்கள், முத்தம்பாளையம் வழியாகவும், டீசல் ?ஷட் வழியாகவும், பழைய பாளையம் பகுதி வழியாக வரும் வாகனங்கள், டீச்சர்ஸ் காலனி வழியாகவும் சொல்ல வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.