பதிவு செய்த நாள்
13
ஜன
2019
01:01
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில், நேற்று, கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மங்களவாத்தியம் முழங்க, தைப்பூசத் திருவிழா கொடியேற்றப்பட்டது. அப்போது, உற்சவர் சண்முக சுவாமி, வள்ளி- தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, விக்னேஸ்வரர், சுப்ரமணியர், சண்டிகேசர் சகிதமாக உற்சவ மண்டபம் எழுந்தருளினர்.தினமும் காலை, மாலை நேரங்களில் படிச்சட்டத்தில் சுவாமி வீதியுலா புறப்பாடு நடக்கிறது. வரும், 16ம் தேதி இரவு, வெள்ளி மயில் வாகனத்தில் பஞ்ச மூர்த்தி புறப்பாடும், 20ம் தேதி தேரோட்டமும், மறுநாள் தீர்த்தவாரி வைபவமும் நடக்கிறது.