Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ... கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) சுபநிகழ்ச்சி கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) சுபயோகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) சுபயோகம்

பதிவு செய்த நாள்

14 ஜன
2019
02:01

இந்த மாதம் சூரியன் மற்றும் கேதுவால் சிறப்பான பலன் காண்பீர்கள். சுக்கிரன் ஜன.30ல் 5-ம் இடத்திற்கு மாறினாலும் மாதம் முழுவதும் சுபயோகம் உண்டாகும். புதன் ஜன.17ல் இருந்து பிப்.1 வரை 6-ம் இடத்தில் இருப்பதால் எடுத்த முயற்சி வெற்றி அடையும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தேறும்.  

சூரியன், கேதுவால் பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் வாங்கலாம். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். உறவினர்களிடம் சுமுக நிலை ஏற்படும். புதிய உறவினர் அறிமுகத்தால் உதவி கிடைக்கும். ஜன.31க்கு பிறகு பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர்.  தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

ஜன.15,16ல் கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்காது. அவ்வப்போது பிரச்னை வந்து மறையும்.
ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். புதன் ஜன.17ல் சாதகமான இடத்துக்கு வருவதால் பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். தம்பதியிடையே அன்பு பெருகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

ஜன.23,24ல்  சகோதரிகள் உறுதுணையாக இருப்பர். ஆடம்பர பொருட்கள் வாங்கலாம். ஜன.19,20ல் உறவினர் வருகையும்,  அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் ஜன.30,31ல் உறவினர் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கியிருக்கவும்.

பணியாளர்கள் பணியில் நல்ல வளர்ச்சி காணலாம். மேலதிகாரிகளின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஜன.16க்கு பிறகு ஒன்று சேருவர். அதன் பிறகு பதவிஉயர்வு கிடைக்க வாய்ப்புண்டு.
சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். ஜன.17,18ல் அதிர்ஷ்டவசமாக நன்மை எதிர்பார்க்கலாம். பிப்.1க்கு பிறகு வேலையில் பொறுமை தேவை. பணிப்பளுவை சுமக்க வேண்டியதிருக்கும். வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பளம், பதவி உயர்வுக்கு தடையிருக்காது.  

வியாபாரிகள் சூரியனால் பகைவர்களை வெல்லும் பலம் பெறுவர். பொருளாதார வளம் கூடும். தொழில்ரீதியாக வெளியூர் பயணம் சென்றவர்கள் விரைவில் வீடு திரும்புவர். ஜன.21,22,25,26ல் வீண்விரயம் ஏற்படலாம். உங்கள் முயற்சிகளில் தடைகள் குறுக்கிடலாம். பிப்.3,4,5ல் அதிர்ஷ்டவசமாக லாபம் கிடைக்கும்.
சுக்கிரனால் ஜன.31க்கு பிறகு கூடுதல் வளர்ச்சியும், பணவரவும் இருக்கும். பங்குதாரர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தம் மூலம் வருமானம் உயரும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள்  பிரதிபலன் எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

மாணவர்கள் இந்த மாதம் புதனால் கூடுதல் அனுகூலம் காண்பர். தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதோடு, போட்டிகளில் பங்கேற்று வெற்றிவாகை சூடுவர். பிப்.1க்கு பிறகு படிப்பில் மெத்தனமாக இருக்க வேண்டாம்

விவசாயிகளுக்கு நெல், கேழ்வரகு, பச்சை காய்கறிகள் போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும். வழக்கு, விவகாரத்தில் முடிவு சாதகமாக இருக்கும்.  பிப்.1க்கு பிறகு கால்நடை வளர்ப்பின் மூலம் பலன் காண முடியாது.

பெண்கள் குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்ல வாய்ப்புண்டு. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஜன.17க்கு பிறகு பணியிடத்தில் மதிப்பு உயரும். சகஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர்.  கோரிக்கைகள் நிறைவேற வாய்ப்புண்டு.
ஜன.27,28,29ல் ஆடை, ஆபரணம் வாங்கலாம். உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் ஜன.31க்கு பிறகு பூரண குணம் பெறும்.

* நல்ல நாள்:ஜன.17,18, 19,20, 23,24,27,28, 29, பிப்.3, 4,5,6,7
* கவன நாள்: பிப்.8,9,10 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்:1,9
* நிறம்: வெள்ளை, சிவப்பு

* பரிகாரம்:
●  வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு வில்வமாலை
●  செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம்
●  பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு நெய் விளக்கு.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் அம்பு எய்தல் நிகழ்ச்சி இன்று நடந்தது. ... மேலும்
 
temple news
டில்லியில் நடந்த தசரா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ராவண பொம்மையை நோக்கி அம்பை ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு மகிஷாசுர ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று மஹாநவமி உத்சவம் விமரிசையாக ... மேலும்
 
temple news
மருதமலை: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில், விஜயதசமி விழாவையொட்டி, அம்பு சேர்வை நடந்தது.முருகனின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar