பதிவு செய்த நாள்
16
ஜன
2019
01:01
உடுமலை:பிரசித்தி பெற்ற, சோமவாரபட்டி, ஆல்கொண்டமால் கோவில், பொங்கல் திருவிழா, இன்று (ஜன., 16ல்) துவங்குகிறது; முக்கிய நிகழ்வான உருவார சிறப்பு பூஜைகள் நாளை (ஜன., 17ல்) நடக்கிறது.
உடுமலை அருகேயுள்ள, சோமவாரபட்டியில், கால்நடைகளை காக்கும் தெய்வமாக ஆல் கொண்டமாலை பக்தர்கள் வணங்கி வருகின்றனர். கால்நடை வளம் பெருகவும், வேளாண்மை செழிக்கவும், விவசாயிகள், ஆல்கொண்டமாலுக்கு, பால் கொண்டு வந்து அபிஷேகம் செய்து வழிபடுவதையும், பாரம்பரிய விழாவாகவும் கொண்டாடி வருகின்றனர்.
கால்நடைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் தீர அவை போன்று உருவாரங்களை நேர்த்திக் கடனாக செலுத்துகின்றனர். தை முதல்நாள் பிறக்கும் கன்றுகளை, ஆல்கொண்டமால் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கியும், வழிபடுகின்றனர்.சலகெருதுகளின் தாய்வீடுநாட்டு மாட்டு இனங்களை பாதுகாக்கும் வகையில், கிராமந்தோறும் சலகெருது தேர்வு செய்யப்பட்டு, மார்கழி மாத இரவுகளில், பாரம்பரிய கலைகளோடு அவற்றை பழக்குகின்றனர். இவ்வாறு, மார்கழியில், கிராமங்களில் பழக்கப்படும் சலகெருதுகள், ஆல்கொண்டமால் கோவிலுக்கு, இசை வாத்தியங்களுடன், பாரம்பரிய நடனமாடி அழைத்து வரப்படுகின்றன.
அங்கு, சலகெருதுகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இந்த சிறப்பு பூஜைகள் நாளை கோவிலில் நடக்கிறது.ஏற்பாடுகள் தயார்திருவிழாவையொட்டி, போலீஸ் கண்காணிப்பு கோபுரம், சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
உடுமலை, பொள்ளாச்சி பகுதிகளிலிருந்து, 50 சிறப்பு பஸ்கள் நாளை இயக்கப்படுகிறது. திருவிழாவையொட்டி, இன்று (ஜன., 16ல்)அதிகாலை, 5:00க்கு, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடக்கிறது.பகல் 11:00க்கு, சிறப்பு அபிஷேக பூஜையும், மாலை, 6:00க்கு, உழவர் திருநாள் பூஜை நடக்கிறது; நாளை 17 ம் தேதி, அதிகாலை, 5:00க்கு, சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜையும், தொடர்ந்து தீபாராதனை நடக்கிறது.வரும் 18 ம் தேதி, அதிகாலை, 5:00க்கு, சிறப்பு அலங்காரம், தீபாராதனை மற்றும் மூலவருக்கு விவசாயிகள் கொண்டு வரும் பாலாபிஷே கமும் மாலை, 6:00க்கு, மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடக்கிறது. இரவு, 7:00 க்கு, மகா தீபாராதனை , 9:00க்கு, சுவாமி திருவீதி உலா, வாண வேடிக்கை நடக்கிறது.