மங்கலம்பேட்டை: கோணாங்குப்பம் புனித பெரியநாயகி அன்னை ஆலய தேர் திருவிழாவை யொட்டி கொடியேற்றம் நடந்தது.நேற்று முன்தினம் (ஜன., 14ல்) நடந்த கொடியேற்று விழாவை யொட்டி, பங்கு தந்தை அருள்தாஸ் தலைமையில், மாலை 6:30 மணியளவில் சிறப்பு கூட்டுத் திருப்பலி, இரவு 7:00 மணியளவில் கொடியேற்றம் நடந்தது. 23ம் தேதி தேர் திருவிழாவையொட்டி, அன்று காலை 9:00 மணிக்கு திருப்பலி, மாலை 6:00 மணிக்கு சிறப்பு கூட்டு திருப்பலி, இரவு 9:00 மணிக்கு அலங்கரித்த தேரில் பெரியநாயகி அன்னை பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.