ஆண்டிபட்டி:சக்கம்பட்டி நன்மை தருவார் ஐயப்ப சுவாமி கோயிலில் மகரஜோதி விழா நடந்தது. ஐயப்பசுவாமி கோயிலுக்கு நேர் எதிர் திசையில் உள்ள டி.சுப்புலாபுரம் நாழி மலையில் மகர ஜோதி தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். நேற்று முன்தினம் (ஜன., 14ல்)மாலை 6:45 மணிக்கு ஏற்றப் பபட்ட மகரஜோதி தீபத்தை பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். தீபம் ஏற்றப்பட்ட நேரத்தில் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.