குளித்தலை கடம்பர்கோவில் 32ம் ஆண்டு சங்கராந்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜன 2019 02:01
குளித்தலை: குளித்தலை, கடம்பர்கோவில் முற்றிலா முளையம்மை உடனுறை கடம்ப வனேஸ்வரருக்கு பொதுப்பணித்துறை ஆற்று பாதுகாப்பு உட்கோட்ட அனைத்து அலுவலர்கள் மற்றும் பகுதி விவசாயிகள் சார்பில், 32ம் ஆண்டு சங்கராந்தி விழா நடந்தது. நேற்று (ஜன., 15ல்) காலை, 8:00 மணியளவில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
பொதுப்பணித்துறை எஸ்.டி.ஓ., சரவணன், ஏ.இ., கொழுஞ்சிநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். இரவு, 7:00 மணியளவில் சிறப்பு அபிஷேகம், சுவாமி திருவீதி உலா நடந்தது. தொழில் நுட்ப உதவியாளர் கோபிநாத், உழவர் மன்ற அமைப்பாளர் கோபாதேசிகன் மற்றும் அலுவலக பணியாளர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.