குன்னூர்:அருவங்காடு பாலமுருகன் கோவிலில் 42வது ஆண்டு தைப்பூச திருவிழா, 21ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி காலை, 7:00 மணிக்கு கலச ஸ்தாபன பூஜை, 7:30 மணிக்கு மகா கணபதி ஹோமம், 9:00 மணிக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனை, அன்னதானம் ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து மாலை, 6:00 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடக்கிறது. முன்னதாக இன்று, தை கிருத்திகை சிறப்பு பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர், விழா குழுவினர் செய்து வருகின்றனர்.