பதிவு செய்த நாள்
16
ஜன
2019
02:01
நாமக்கல்: பொங்கல் விழாவை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, 500 கிலோ பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. நாமக்கல்லில், ஒரே கல்லினாலான, 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர், நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார்.
நேற்று (ஜன., 15ல்), பொங்கல் விழாவை முன்னிட்டு காலை, 9:00 மணிக்கு சுவாமிக்கு வடை மாலை சாற்றப்பட்டது. 10:00 மணிக்கு நல்லெண்ணெய், பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர், 500 கிலோ பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. மதியம், 1:30 மணிக்கு தீபாராதனை காண்பிக்கப் பட்டது. தொடர்ந்து, மேட்டுபாளையம் வாசுதேவன் ஹரி நாம ஸ்மரன் பஜன் மண்டலி சார்பில் பக்தி பாடல்கள் பாடப்பட்டன. ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.