பதிவு செய்த நாள்
16
ஜன
2019
02:01
மயிலம்:மயிலம் முருகர் கோவிலில் தைப் பொங்கல் விழா நடந்தது. மயிலம் வள்ளி, தொய்வானை, சுப்பரமணியர் சுவாமி கோவில் தைப்பொங்கல் விழாவை யொட்டி, நேற்று (ஜன.,15ல்) காலை 6:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. 11:00 மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர், நவகிரக சுவாமிக்கு சந்தனம், தேன் உள்ளிட்ட நறுமணப்பொருட்களினால் அபிஷேகம் நடந்தது. மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிற்பகல் 1:00 மணிக்கு கோவில் மண்டபத்தில் பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.
இரவு 9:00 மணிக்கு உற்சவர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின், வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் கிரிவல காட்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.