பதிவு செய்த நாள்
17
ஜன
2019
12:01
பெரியகுளம்: பெரியகுளத்தில், வரதராஜப் பெருமாள் கோயிலிருந்து ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் பெருந்தேவி தாயார் வீதி உலா நடந்தது. விழாவில் சிறப்பாக பிறந்த வீடு மற்றும் சகோதாரர்கள் நலமுடன் வாழ பெண்கள் விரதம் மேற்கொண்டனர். பெரியகுளம் வரதராஜப் பெருமாள் கோயிலில், பெருந்தேவி தாயாருக்கு பொங்கல் மறுநாளான நேற்று, கணுஉற்ஸவம் பூஜை நடந்தது. மூலவர் பெருந்தேவி தாயாருக்கு சந்தனம், பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பொருட்களில் அபிஷேகம் நடந்தது. ஆண்டுக்கு ஒரு முறை உற்ஸவர் பெருந்தேவி தாயார் வீதி உலா சென்றார். தெற்கு அக்ரஹாரம், வடக்கு அக்ரஹாரம் உட்பட முக்கிய வீதிகளில் வீதி உலா நடந்தது.
பக்தர்கள் வாசலில் கோலமிட்டு, பெருந்தேவி தாயாரை வழிபட் டனர். மஞ்சள் உருண்டை பிரசாதமாக வழங்கப்பட்டது. அர்ச்சகர் குழுவினர் கூறுகையில்: ""பிறந்த வீட்டாரும், சகோதரர்களும் நலமுடன், வளமுடன் வாழ்வதற்கு இந்த கணு விரதத்தை பெண்கள் இருந்து வருகின்றனர். பெருந்தேவி தாயாரை வணங்கிவிட்டு விரதத்தை முடித்து கொள்கின்றனர்., என்றனர்.