பதிவு செய்த நாள்
17
ஜன
2019
11:01
பழநி: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, பழநி அருகே பெரியகலையம்புத்துாரில் உள்ள அவரது கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. நெய்க்காரப்பட்டி பேரூராட்சி, பெரியகலையம்புத்துாரில் வள்ளுவர் சமுதாய மக்கள் சார்பில் திருவள்ளுவருக்கு கோயில் கட்டி கடந்த 11 ஆண்டுகளாக வழிபடுகின்றனர். நேற்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு 5 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலைக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை பொருட்களால்அபி ஷேகம், அலங்காரம், பொங்கல், கரும்பு, பொரி கடலை படைத்து பூஜைகள் நடந்தது. பள்ளி மாணவர்கள் திருக்குறள் படித்தனர். பழநி சுற்றுவட்டாரம், திண்டுக்கல், கோவை, நாமக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த ஏராளமானோர் திருவள்ளுவரை வழிபட்டனர். மாணவர்களுக்கு விளையாட்டுபோட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை திருவள்ளுவர் இளைஞர் நற்பணி மன்றத்தினர், விழாகமிட்டினர் செய்தனர்.