பள்ளிபாளையம் வழியாக பழநிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜன 2019 03:01
பள்ளிபாளையம்: பல்வேறு மாவட்டங்களில் இருந்து, பழநிக்கு பாதயாத்திரை செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பள்ளிபாளையம் வழியாக சென்றனர். சேலம், நாமக்கல் மற்றும் பல மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கா பக்தர்கள், பழநிக்கு நடைபயணமாக பாதயாத்திரை செல்கின்றனர். இவர்கள் கடந்த மூன்று நாட்கள், பள்ளிபாளையம் காவிரி பாலம் வழியாக செல்கின்றனர். நேற்று (ஜன., 16ல்) காலை, 2:00 மணி முதல் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக சென்றனர்.