பதிவு செய்த நாள்
19
ஜன
2019
12:01
கோவை: சக்தி விநாயகர், வைத்தீஸ்வரர் கோவிலில், 108 வலம்புரி சங்காபிஷேகம் நடந்தது.கோவை வெள்ளலுார் - சிங்காநல்லுார் சாலை, சக்தி விநாயகர் நகரில், 2004ம் ஆண்டு சக்தி விநாயகர், தையல்நாயகி உடனமர் வைத்தீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது. இந்நகர் குடியிருப்போர் நலச்சங்கம், மகளிர் வழிபாட்டு குழுவினர் இணைந்து கோவில் திருப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்தாண்டு, கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேக முதலாமாண்டு விழா முன்னிட்டு, நேற்று காலை திருவிளக்கு ஏற்றுதல், ேஹாமங்கள், சிறப்பு பூஜைகள், நடந்தன; 108 வலம்புரி சங்காபிஷேகமும் நடந்தது. மாலையில், வைத்தீஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர்.