பதிவு செய்த நாள்
19
ஜன
2019
12:01
பள்ளூர், பள்ளூர் கொள்ளுமோட்டம்மன் கோவிலில், நேற்று கோலாகலமாக திருவிழா நடந்தது.காஞ்சிபுரம் அடுத்த, பள்ளூர் கிராமத்தில், கொள்ளு மோட்டம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் திருவிழா நடப்பது வழக்கம்.நடப்பாண்டு திருவிழாவை முன்னிட்டு, நேற்று மாலை, 6:00 மணிக்கு, மலர் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட அம்மன், மேள தாளங்கள், அதிர்வேட்டுகள் முழங்க, வீதியுலா வந்தார்.விழாவிற்கு, காப்பு கட்டிய பக்தர்கள், டிராக்டர் மற்றும் கனரக வாகனங்களில், அலகு குத்தி அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர்.