பொக்காபுரம் கோவில் திருவிழாவுக்கு 65 அரசு சிறப்பு பஸ்கள் இயக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24பிப் 2012 10:02
ஊட்டி : பொக்காபுரம் தேர் திருவிழாவை ஒட்டி 65 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.ஊட்டி அருகேயுள்ள பொக்காபுரம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் ஆண்டு திருவிழா 25ம் தேதி துவங்கி 27ம் தேதி வரை நடக்கிறது. 27ம் தேதி இரவு 10.30 மணிக்கு தேர் திருவிழா நடக்கிறது. திருவிழாவுக்கு உள்ளூர் மற்றும் வெளி மாவட்டத்திலிருந்தும், அண்டைய மாநிலங்களான கர்நாடகா மற்றம் கேரளாவிலிருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்ல அரசு போக்குவரத்து கழகம் மூலம் 65 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஊட்டி மற்றும் கூடலூரிலிருந்து இந்த பஸ்கள் இயக்கப்படும். பொக்காபுரத்தில் முகாம் அலுவலகம் அமைக்கப்பட்டு பக்தர் சிரமம் இல்லாமல் பஸ்களில் சென்று வர ஏற்பாடு செய்யப்படும். "கல்லட்டி மலை பாதையில் சிறிய பஸ்கள் மட்டுமே இயக்க முடியும் என்பதால் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் கூடுதலாக சிறிய பஸ்கள் அந்த வழித்தடத்தில் இயக்கப்படும், என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.