கூடலழகர் கோயில் மாசி மகம் தெப்பத் திருவிழா: பிப்.25ல் கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24பிப் 2012 10:02
மதுரை :மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் மாசி மகம் தெப்பத்திருவிழா கொடியேற்றம், பிப்.,26ல் காலை 10.30 மணிக்கு நடக்கிறது. பிப்.,25 முதல் மார்ச் 8 வரை நடைபெற உள்ள இவ்விழாவில், பிப்.,29 காலை 11 மணிக்கு பெருமாள், கள்ளர் திருக்கோலத்திலும், மாலை 6 மணிக்கு மோகினி திருக்கோலத்திலும் இரவு 7 மணிக்கு கருடவாகனத்திலும் உலா வருவார். மார்ச் 2ல் பெருமாளும், ஆண்டாளும் மாலை மாற்றிக் கொள்கின்றனர். 6ம்தேதி மாலை 4 மணிக்கு, டவுன்ஹால் ரோடு தெப்பத்திற்கு பெருமாள் புறப்படுகிறார். இரவு 7 மணிக்கு தெப்பம் முட்டுத்தள்ளுதல் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் செல்வராஜ், உதவிகமிஷனர் வில்வமூர்த்தி, பேஷ்கார் அழகேசன் செய்கின்றனர்.