பதிவு செய்த நாள்
21
ஜன
2019
03:01
விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி அடுத்த வெட்டுக்காட்டில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை எஸ்.பி., ஜெயக்குமார் வழங்கினார்.விக்கிரவாண்டி ஒன்றியம் ராதாபுரம் அடுத்த வெட்டுக்காடு வள்ளலார் சன்மார்க்க அறக்கட்டளை சார்பில் நடந்த விழாவிற்கு நிர்வாக தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார்.
தொரவி சுப்ரமணி, தங்கம் சந்தோஷ், டாக்டர் கவுசல்யா சந்தோஷ் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் உதவி இயக்குனர் துரைசாமி வரவேற்றார்.விழாவில் ராதாபுரம் , எஸ்.எஸ்.ஆர் பாளையம், வெட்டுக்காடு, கயத்தூர், ஆவுடையார்பட்டு , சிறுவள்ளிக்குப்பம் ஆகிய கிராமங்களை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி சீருடைகளை எஸ்.பி., ஜெயக்குமார் வழங்கி பேசினார்.விழாவில் பி.ஓ.,க்கள் அறவாழி, நாராயணன், சபை துணை தலைவர் சேகர், சக்திவேல், ராஜேந்திரன், முகுந்தன், அய்யனார் உட்பட பலர் கலந்து கொண்டனர். ரமேஷ் நன்றி கூறினார்.