பதிவு செய்த நாள்
21
ஜன
2019
03:01
மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரைக்கோவில், ஜெட் விமானத்தின் புகை பின்னணியில் மிளிர்ந்து, சுற்றுலாப் பயணியர், பரவசம் அடைந்தனர்.மாமல்லபுரத்தில், கி.பி., 7ம் நூற்றாண்டு, பல்லவர் கால, கடற்கரைக்கோவில், சுற்றுலாப் பயணியரை கவர்கிறது. தொல்லியல் துறைக்கு நுழைவுக்கட்டணம் செலுத்துவோர், இக்கோவிலை, அருகிலிருந்து, கண்டு ரசிக்கின்றனர். வடகிழக்கு பருவ மழைக்காலம் முடிந்து, தற்போது, இயல்பு சூழல் நிலவுகிறது.
அந்தி மாலை சிவந்த வான பின்னணியில், ரம்மியமான சூழலில், இக்கோவிலை காண்பது, மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும்.இது ஒருபுறமிருக்க, அவ்வப்போது, இவ்வழியே கடந்த, ஜெட் விமானத்தின் புகை, கோவில் பின்னணியில் தோன்றியது. இக்கண்கொள்ளாக் காட்சியை பயணியர் கண்டு ரசித்தனர்.