பதிவு செய்த நாள்
21
ஜன
2019
03:01
அவிநாசி:அவிநாசி, ஊஞ்சப்பாளையத்தில் உள்ளஸ்ரீ மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று (ஜன., 20ல்) நடந்தது.
பழமையான இக்கோவில் புணரமைக்கப் பட்டு புதிய கற்கோவில் கட்டப்பட்டது. இதன் கும்பாபிஷேக நிகழ்ச்சி கடந்த, 16ம் தேதி துவங்கியது. தினசரி பல்வேறு சிறப்பு பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டன. நேற்று முன்தினம் (ஜன., 19ல்), விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, பூர்ணாகுதி நிகழ்ச்சிகளும், இரவு, கருவறையில் சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, அஷ்டபந்தன மருந்து சாற்றப்பட்டது.
பின், அம்மன் கலைக்குழுவினரின் ஒயிலாட்டம், வள்ளிகும்மி கலைநிகழ்ச்சியும், கொங்கு பெருஞ்சலங்கை ஆட்டமும் அரங்கேறியது.நேற்று (ஜன., 20ல்)காலை, மங்கள இசையுடன் விக்னேஸ்வர பூஜை, நாடிசந்தானம், மகாபூர்ணாகுதி பூஜை, கலசங்கள் புறப்பாடு நடந்தது. காலை, 10:20 மணிக்கு ஸ்ரீ மாகாளியம்மன் விமான கோபுரம், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ கன்னிமாருக்கு, அவிநாசி காமாட்சி தாச சுவாமிகள்குழுவினர், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.