பதிவு செய்த நாள்
21
ஜன
2019
03:01
திருப்பூர்:முருகன் கோவிலில், தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது; பக்தர்கள் அலகு குத்தி, காவடி எடுத்து வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.திருப்பூர், மலைக்கோவிலில், தைப்பூச விழா, நேற்று (ஜன., 20ல்) நடந்து.
சுவாமிக்கு அபிஷேகம், ஆரா தனை நடந்தது. விழாவில், சுற்றுவட்டாரத்தில் உள்ள பக்தர்கள் அலகு குத்தி, காவடி மற்றும் பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து, நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.முன்னதாக, அங்குள்ள தனியார் பள்ளி அருகேயுள்ள அம்மன் கோவிலில் துவங்கிய பக்தர்களின் பாத யாத்திரையில், பழமையான வேல் வழிபாடு மற்றும் பாரம்பரிய பறையிசை இடம் பெற்றது. பின், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில், முருகன் நகர் வலம் வந்தார். பாரம்பரிய உணவுகளான தேன், தினைமாவு, பஞ்சாமிர்தம், பச்சை பயிறு, மாவிளக்கு, கிழங்கு வகை பிரசாதமாக வழங்கப்பட்டன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில், நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.