பதிவு செய்த நாள்
21
ஜன
2019
04:01
இடைப்பாடி: பெரியாண்டிச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடந்த தீர்த்தக் குட ஊர்வலத்தில் திரளானோர் பங்கேற்றனர். இடைப்பாடி அருகே, ஒட்டப்பட்டி, ஆனந்தாயி அம்மன் கோவில் உள்ளது. அங்கு, அம்மன் சுவாமி, 17 அடி நீளம், 10 அடி அகலத்தில், படுத்த நிலையில், கல்லால் செதுக்கப்பட்டுள்ளது.
அதன் கும்பாபிஷேகம், இன்று (ஜன., 21ல்) நடக்கவுள்ளது. அதை முன்னிட்டு, கங்கை, பிரம்மபுத்திரா, யமுனை உள்ளிட்ட புண்ணிய நதிகளிலிருந்து, ஏற்கனவே புனிதநீர் கொண்டு வரப்பட்டது. நேற்று, (ஜன., 20ல்)பூலாம்பட்டி காவிரியாற்றிலிருந்து, பரமானந்த சுவாமிகள் தலைமையில், 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், தீர்த்தக்குடங்களை எடுத்து வந்தனர். முன்புறம் குதிரைகள் செல்ல, பக்தர்கள், நாச்சிபாளையத்திலிருந்து, சவுரிபாளையம் பிரிவு சாலை, ஒட்டப்பட்டி வழியாக, கோவில் வளாகத்தை அடைந்தனர். இன்று நடக்கவுள்ள கும்பாபிஷேகத்தில், புனிதநீர், பெரியாண்டிச்சி அம்மன் மீது ஊற்றப்பட்டு, பூஜை நடக்கும்.