பதிவு செய்த நாள்
22
ஜன
2019
02:01
உடுமலை:உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது.தைப்பூசத் திருவிழாவையொட்டி, உடுமலை சுற்றுப்பகுதி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில், காலையில், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு, பால், பன்னீர், உள்ளிட்ட 16 திரவியங்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
சிறப்பு அலங்காரத்துடன், சுப்ரமணியசுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலையில், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிகளின் வெள்ளித் தேர் திருவீதி உலா நடந்தது. தைப்பூச பால்காவடி திருவிழாமடத்துக்குளம் அருகே பாப்பான்குளம் பஸ் நிறுத்தம் அருகில், பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஆயிரம்படி பால் அபிஷேகம் செய்யும் பால்காவடி திருவிழா நேற்று (ஜன., 21ல்), காலை 6:00 மணிக்கு வெள்ளனூர் அம்மன் கோவிலில் மங்கள இசையுடன் தொடங்கியது.
விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், புண்யாக வாசனம், பஞ்சகவ்ய பூஜை, துர்கா லட்சுமி ஹோமம், கோ பூஜை, பால்குடங்கள் பூஜைக்கு பின், பால் காவடி வீதி உலா வந்தது.காலை, 10:00 மணிக்கு ஞான விநாயகர், தண்டாயுதபாணிக்கு ஆயிரம்படி பால் அபிஷேகமும், ராஜ வெள்ளி கவச அலங்காரமும், பகல் 11:00 மணிக்கு தூப,தீப நைவேத்தியம், மகாதீபாரதனை, அன்ன தானமும் நடந்தன.பால் அபிஷேகத்துக்கு, பாப்பான்குளம் பகுதியைச்சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள், ஆயிரம் படி பால் வழங்கினர்.