பதிவு செய்த நாள்
22
ஜன
2019
03:01
காரமடை அருகே குருந்தமலையில் குழந்தை வேலாயுதசுவாமி கோவில் உள்ளது. இங்கு தைப்பூசத் தேர்த்திருவிழா கடந்த, 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று (ஜன., 21ல்) வள்ளி, தெய்வானையுடன் குழந்தை வேலாயுதசுவாமி தேருக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.மாலை, 5:30 மணிக்கு எம்.எல்.ஏ., சின்னராஜ், நந்தகுமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆறுமுகசாமி உள்பட பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் மலையை சுற்றிக் கொண்டு மாலை, 6:45 மணிக்கு நிலையை அடைந்தது.
* கருமத்தம்பட்டியை அடுத்து, எலச்சிபாளையம் பிரிவில் உள்ளது சென்னியாண்டவர் கோவில். இங்கு கடந்த ஜன., 12ம் தேதி கணபதி ஹோமம், 13ல் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது.நேற்று (ஜன., 21ல்) பிரசித்திபெற்ற தேர்த்திருவிழா நடந்தது. அதிகாலை 4:00 மணியளவில் கோவிலில் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின், சுவாமி தேரில் எழுந்தருளினார்.
மாலையில் தேரோட்டம் துவங்கியது. முக்கிய வீதிகள் வழியாக சென்னியாண்டவர் திருவீதி உலா வந்தார். பின்னர் இரவில் கலைநிகழ்ச்சிகள், வானவேடிக்கைகள் நடந்தன.