பதிவு செய்த நாள்
22
ஜன
2019
03:01
மேட்டுப்பாளையம்:மூலத்துறை ராமலிங்க சந்திர சவுடாம்பிகை அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
சிறுமுகையை அடுத்த மூலத்துறையில், 150 ஆண்டுகள் பழமையான ராமலிங்க சந்திர சவுடாம்பிகை அம்மன் கோவில் உள்ளது. கடந்த சில மாதங்களாக கோவிலில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டன.
கும்பாபிஷேகம் விழா கடந்த, 18ம் தேதி மூத்தபிள்ளையார் வழிபாட்டுடன் துவங்கியது. மூலத் துறை குழந்தைவேல், சக்திவேல், தண்டாயுதபாணி ஆகியோர் தலைமையில் சிவநெறித் தொண்டர்கள் யாகவேள்விகளை நடத்தினர்.
பவானி ஆற்றிலிருந்து புனிதநீரும், முளைப்பாலிகையும் எடுத்து வந்து, விமான கலசங்களை நிறுவி, எண்வகை மருந்து சாத்தி, நான்காம் கால வேள்விகளை செய்து முடித்தனர்.நேற்று முன்தினம் (ஜன., 20ல்) காலை, 9:00 மணிக்கு வாணவேடிக்கைள் முழங்க புனிதநீர் குடங்கள் கோவிலை வளம் வந்தன.
பேரூராதீனம் சாந்திலிங்க மருதாசல அடிகளார் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.
பின்பு புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.விழாவில் எம்.எல்.ஏ., சின்னராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., அருண்குமார் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவில் அனைவருக் கும் அன்னதானம் வழங்கப்பட்டது.