பதிவு செய்த நாள்
22
ஜன
2019
03:01
பொள்ளாச்சி;பொள்ளாச்சி பகுதியில் இருந்து தைப் பூசத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் பழநி முருகனை தரிசிக்க, பாத யாத்திரையாக செல்கின்றனர்.பொள்ளாச்சி பகுதியில் இருந்து முருக பக்தர்கள், தைப்பூச விழாவுக்கு பழநி முருகனை தரிசிக்க, பாத யாத்திரையாக செல்கின்றனர்.
தைப்பூசமான நேற்று (ஜன., 21ல்) பொள்ளாச்சியில் இருந்து பாதயாத்திரையை துவக்கினர். பாத யாத்திரையின் போது, வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு, வித விமான காவடிகள், வேல், சேவல் உள்ளிட்ட பல்வேறு யசகட பொருட்களை சுமந்து எடுத்துச் சென்று, முருகனுக்கு காணிக்கை செலுத்துவது வழக்கம்.ஊர் வாரியாக குழுக்களாக, பாதயாத்திரை மேற்கொண்டனர். விரதமிருந்து, மாலை அணிந்த பக்தர்கள், அரோகரா கோஷமிட்டு, குழுக்களாக பஜனை பாடல்கள் பாடிச் சென்றனர்.கிராமிய இசைக்கலைஞர்கள் வாசிக்கும் வாத்தியங்கள் முழங்க மூன்று நாட்கள் பாதயாத்திரை சென்று, சுப்ரமணிய சுவாமியை தரிசித்து திரும்புவர்.பாதையில் கவனம் தேவைபழநிக்கு பாத யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், தேசிய நெடுஞ்சாலையில் நடக்கும் போது, வேகமாக வரும் வாகனங்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.
இரவில், வாகன ஒட்டுனர்கள் கவனத்தை கவரும் ஒளிரும் ரிப்ளக்டர் ஸ்டிக்கர்களை ஆடையின் முன்னும், பின்னும் கண்டிப்பாக அணிய வேண்டும். அந்தந்த பகுதி போலீசார், பாத யாத்திரை பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
ஓய்வெடுக்கும் போது, ரோட்டில் இருந்து தள்ளிச்சென்று, பாதுகாப்பான இடத்தில் படுத்து உறங்க வேண்டும்.