பதிவு செய்த நாள்
22
ஜன
2019
04:01
ஊத்துக்கோட்டை: தைப்பூச திருவிழாவையொட்டி நடந்த, சுப்ரமணிய சுவாமி வீதியுலா நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.ஊத்துக்கோட்டை, ஆனந்த வல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ளது
வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி சன்னதி.தைப்பூச விழாவையொட்டி, நேற்று காலை, மகா கணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி ஆகிய தெய்வங்களுக்கு
பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.தொடர்ந்து மஹா தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். பின், உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.