பதிவு செய்த நாள்
22
ஜன
2019
04:01
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பகுதியில், தைப்பூச திருவிழாவையொட்டி நடந்த விழாவில், திரளான பக்தர்கள் அலகு குத்தியும், பால் குடம் சுமந்து சென்றும், அபிஷேகம் செய்து சுவாமியை வழிபட்டனர்.
ஊத்துக்கோட்டை அடுத்த, தொம்பரம்பேடு கிராமத்தில் உள்ளது மகா கால பைரவர் கோவில். பழமை வாய்ந்த, இக்கோவில் வளாகத்தில் உள்ளது வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி சன்னிதி. நேற்று (ஜன., 21ல்), தைப்பூச திருவிழாவை யொட்டி, பக்தர்கள் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலில் இருந்து, பால்குடம் சுமந்தும், அலகு குத்தியும் நடந்து
சென்று கோவிலை அடைந்தனர்.
அங்கு பக்தர்கள் எடுத்து வந்த பாலால் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. பின், மலர் அலங் காரம் செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது.மாலை, 4:00 மணிக்கு, உற்சவர் வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கிராமத்தில் உள்ள தெருக்களில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.